ஓய்வூதியர் பொதுக்குழு கூட்டம்

ஓய்வூதியர் பொதுக்குழு கூட்டம்
Updated on
1 min read

தமிழ்நாடு ஓய்வூதியர் சங்க திருநெல்வேலி மாவட்ட மைய பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய அரங்கில் நடைபெற்ற இந்த கூட்டத்துக்கு ஊரக வளர்ச்சி துறை ஓய்வுபெற்ற உதவி இயக்குநர் வே.தேவிகா தலைமை வகித்தார்.

மாரிக்கண்ணு வரவேற்றார். செயலாளர் சேவியர் ராஜா அறிக்கை வாசித்தார். பொருளாளர் பாஷ்யம் வரவு செலவு அறிக்கை வாசித்தார். மாவட்ட துணைத் தலைவர் இரா.சீத்தாராமன் தொகுத்து வழங்கினார். மாநில துணை பொதுச் செயலாளர் சாமி. நல்ல பெருமாள், மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அரசாணையில் கூறியிருப்பது போல Cash less திட்டமாக அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட ஓய்வூதியர் சங்க தேர்தல் அலுவலராக ஓய்வு பெற்ற கூட்டுறவு தணிக்கை அலுவலர் டி. தரன், துணைத் தேர்தல் அலுவலராக ஓய்வு பெற்ற டிஎஸ்பி சமுத்திரக்கனி தேர்வு செய்யப்பட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in