

என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கூறினார்.
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தனது முதல் கட்டத் தேர்தல் பிரச் சாரத்தை மதுரையில் கடந்த 13-ல் தொடங்கினார். நேற்று முன்தினம் தேனி, திண்டுக்கல்லில் அவர் பிரச்சாரம் செய்தார்.
நேற்று விருதுநகர் மாவட் டத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.
முன்னதாக சத்திரரெட்டிய பட்டி யில் கட்சியினர் மற்றும் ரசிகர் கள் கமல்ஹாசனுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர், விருதுநகர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள மூளிப்பட்டி அரண்மனை அருகே எதுவும் பேசாமல் கமல்ஹாசன் சென்றதால் கட்சியினரும், ரசிகர் களும் ஏமாற்றம் அடைந்தனர்.
அதைத் தொடர்ந்து, சிவகாசி யில் தனியார் மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில் தொழிலதிபர்களுடன் கமல்ஹாசன் கலந்துரையாடினார்.
பின்னர், தொழிலாளர்கள் மத்தியில் அவர் பேசியதாவது
கூவத்தைச் சுத்தப்படுத்துவேன் எனக் கூறியவர்கள் யாரும் அதைச் சரி செய்யவில்லை. மதத்தால் பிரிவினை செய்வோருக்குத் தமிழகம் தக்க பாடம் புகட்டும். எத்தனை தடைகள் வந்தாலும் மீறிச் செல்வோம், பின்வாங்க மாட்டோம்.
என்னை சினிமாக்காரன்போல் தாய்மார்கள் பார்க்கவில்லை. வெற்றி உனக்கு எனத் தெரிவிக் கிறார்கள். எஜமானி அம்மா இறந்த பின்பு சாவிக்குச் சண்டை போடுகிறார்கள்.
எம்.ஜி.ஆர். இரட்டை இலைச் சின்னம் பெற்ற காரணம் வேறு, தற்போது வேறு நிலை உள்ளது. இரண்டு பேர் இலையில் சோறு போட்டுச் சாப்பிடுகிறார்கள். சிவகாசி பட்டாசுத் தொழிலில் எந்த மாற்றமும் ஏற்படுத்தாமல் வேலையை நிறுத்துவது என்பது எந்த நல்ல அரசும் செய்யாது, என்று கூறினார்.