

பெரம்பலூருக்கு நாளை(டிச.17) வருகை தரும் தமிழக முதல்வர் பழனிசாமி ரூ.24.41 கோடி மதிப்பிலான 8 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, ரூ.19.25 கோடி மதிப்பிலான 4 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக் கல் நாட்டி, ரூ.23.58 கோடி மதிப்பில் 1,614 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ப.வெங்கடபிரியா தெரிவித்ததா வது: தமிழக முதல்வர் பழனிசாமி நாளை(டிச.17) பிற்பகல் பெரம் பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவ லக வளாகத்தில் ரூ.24.41 கோடி மதிப்பிலான 8 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, ரூ.19.25 கோடி மதிப்பிலான 4 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுவதுடன், ரூ.23.58 கோடி மதிப்பில் பல்வேறு துறைகளின் சார்பில் 1,614 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்க உள்ளார்.
மேலும், மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டுள்ள பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் மற்றும் கரோனா தடுப்பு பணிகள் குறித்து அனைத்து துறை முதன்மை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொள்கிறார். இதையடுத்து குறு, சிறு நடுத்தரத் தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுவினர்களுடன் கலந்தாய்வு மேற்கொள்கிறார்.