

தென்காசி மாவட்டம், ஊத்துமலை அருகே உள்ள ரெட்டியார்பட்டியைச் சேர்ந்தவர் இசக்கித்துரை(37). ஆட்டோ ஓட்டுநரான இவரை, அதே ஊரைச் சேர்ந்த ஒருவர் அரிவாளால் வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டார். ஊத்துமலை போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.