

மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் உள்ள எம்.கே.புரத்தைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (25). இவர் கடந்த 13-ம் தேதி மெட்டல் கடை அருகே சென்றார். அப்போது அவரை வழிமறித்த இருவர் கத்தி முனையில் மிரட்டி ரூ. 1,350-ஐ பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.
இதுதொடர்பாக புகாரின் பேரில், ஜெய்ஹிந்த்புரம் போலீஸார் விசாரணை நடத்தி ஜீவா நகர் 2-வது தெருவைச் சேர்ந்த மணிகண்டன் (30), மொட்டை மணி (25) ஆகிய இருவரையும் கைது செய்தனர். இவர்கள் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும், ரவுடிகள் பட்டியலில் இருப்பதாகவும் போலீஸார் தெரி வித்தனர்.