மோட்டார் வாகன ஆய்வாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை கணக்கில் வராத ரூ.6.46 லட்சம் பறிமுதல்

மோட்டார் வாகன ஆய்வாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை கணக்கில் வராத ரூ.6.46 லட்சம் பறிமுதல்
Updated on
1 min read

நாமக்கல்லைச் சேர்ந்த மோட்டார் வாகன ஆய்வாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.6 லட்சத்து 46 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மதுரை வடக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் சோதனை மேற்கொண்டனர். அங்கு பணியில் இருந்த நாமக் கல்லைச் சேர்ந்த மோட்டார் வாகன ஆய்வாளர் சண்முக ஆனந்த் சோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.இதைத்தொடர்ந்து நாமக்கல் நல்லிபாளையத்தில் உள்ள அவரது வீடு மற்றும் அவரது தாயார் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் நேற்று முன் தினம் இரவு சோதனை மேற் கொண்டனர்.

லஞ்ச ஒழிப்புத்துறை மாவட்ட துணைக் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், ஆய்வாளர் நல் லம்மாள் தலைமையில் நடந்த இந்தச் சோதனையில் கணக்கில் வராத ரூ.6 லட்சத்து 46 ஆயிரத்து 700 பறிமுதல் செய்யப்பட்டது.

இதற்கிடையே மோட்டார் வாகன ஆய்வாளர் சண்முக ஆனந்த் பணியிடை நீக்கம் செய் யப்பட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in