

கரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை யாக கடந்த மார்ச் 16-ம் தேதி முதல் மேட்டூர் அணை பூங்கா மூடப்பட்டது. ஊரடங்கில் படிப்படியாக பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், மேட்டூர் அணைப் பூங்கா நேற்று திறக்கப்பட்டது. பூங்காவுக்கு வரும் பார்வையாளர்கள் கரோனா வழிமுறைகளை பின்பற்றி அனுமதிக்கப்பட்டனர்.
பூங்காவுக்கு மேட்டூர், கொளத்தூர், மேச்சேரி, நங்கவள்ளி உள்ளிட்ட சுற்று வட்டாரங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தங்கள் குடும்பத்தினருடன் வந்திருந்தனர். கடந்த 9 மாதமாக பூங்கா மூடப்பட்ட நிலையில், பூங்காவில் பல்வேறு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டதால், புது பொழிவுடன் பூங்கா பார்வை யாளர்களை கவர்ந்தது.
இதுபோல, பவானிசாகர் அணைப்பூங்கா நேற்று திறக்கப்பட்டது. சுற்றுலா பயணிகளின் உடல் வெப்பம் பரிசோதிக்கப்பட்டு, கிருமிநாசினி மூலம் கைகள் சுத்தப்படுத்தப்பட்ட பின்னர் அனுமதிக்கப்பட்டனர்.
பொதுமக்கள் கூறும்போது, ‘நீண்ட நாட்களுக்குப் பிறகு பூங்கா திறக்கப்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது, என்றனர்.