

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை கண்டித்தும், விவசாயி களுக்கு ஆதரவாகவும் ஒருங் கிணைந்த வேலூர் மாவட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட 145-க்கும்மேற்பட்டோர் கைது செய்யப் பட்டனர்.
மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக புது டெல்லியில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயி களுக்கு ஆதரவாக நாடு முழுவதும் அகில இந்திய விவசாயிகளின் போராட்ட ஒருங்கிணைப்பு குழு சார்பில் முற்றுகைப் போராட்டம் நேற்று நடைபெற்றது.
அதன்படி, வேலூர் மாவட்டத்தில் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பில் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே வேலூர் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் மேற்பார்வையில் 50-க்கும் மேற்பட்ட காவல் துறை யினர் பாதுகாப்புக்காக குவிக்கப் பட்டனர்.
போராட்டக் குழு ஒருங்கிணைப் பாளர் மகாலிங்கம் தலைமையில் ம.தி.மு.க மாவட்டச் செயலாளர் சுப்பிரமணி, கோபி உட்பட 30-க்கும் மேற்பட்டோர் ஆஞ்சநேயர் சிலை அருகே இருந்து வேளாண் சட்டங்களுக்கு எதிராக முழக்க மிட்டவாறு ஆட்சியர் அலுவலகம் நோக்கி புறப்பட்டனர். அவர்களை, காவல் துறையினர் தடுத்தபோது, சாலைமறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட வர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.
ராணிப்பேட்டை
திருப்பத்தூர்
இதைத்தொடர்ந்து, திருப்பத்தூர் நகர காவல் துறையினர் காத்திருப் புப் போராட்டத்தில் ஈடுபட்டு போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாக கூறி 2 பெண்கள் உட்பட 40 பேரை கைது செய்தனர்.
காட்பாடி
தமிழ் புலிகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் பாலா வள்ளுவன் தலைமையில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற 20-க்கும்மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர்.