

இந்நிலையில், நேற்று அழகர் நகர் பகுதியினர் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி நெடுங்குளம் சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர். இதனால், இப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
போராட்டம் நடத்தியவர்களிடம் கீரைத்துரை போலீஸார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இன்னும் ஒரு வாரத்தில் அடிப்படை வசதிகளை செய்து தர நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர்.