

இம்மெய்நிகர் கீத ஆராதனை பாடகர் குழுவில் 52 மாணவர்களும், ஏழு இசைக்கருவி இசைக்கும் மாணவர்களும் பங்கேற்றனர். ஆசிரியர்களின் குழந்தைகளும் சிறார் பாடகர் குழுவில் பங்கேற்றனர். இணைய வழியாகக் கல்லூரி மாணவர்களுக்கு ஜாய் மார்ஜோரி அன்னாளும், சிறார் பாடகர் குழுவுக்கு ஜெஸ்ஸியும் பயிற்சி அளித்தனர். மாணவர்கள் இப்பாடல்களை தங்களின் இல்லங்களில் இருந்தே பாடி இணையத்தில் பதிவேற்றினர்.
பல்வேறு மாணவர்களிடமிருந்து பெறப்பட்ட குரல்களும் பாடல்களுக்கான இசையும் ‘தகவல் தொடர்பு - பல் ஊடக மையம்’ மற்றும் ‘தன்னார்வல மாணவர்கள்’ உதவியுடன் ஒன்றாக இணைக்கப்பட்டு பாடல்களாக வெளிவந்தன. மெய்நிகர் கீத ஆராதனையில் மாணவர்கள், குழந்தைகள் மட்டுமல்லாது, ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்களும் பங்கேற்று பாடினர்.