ஈரோடு புனித அமல அன்னை ஆலயத்தில் தேர்த்திருவிழா

ஈரோடு புனித அமல அன்னை ஆலயத்தில் தேர்த்திருவிழா
Updated on
1 min read

ஈரோடு புனித அமல அன்னை ஆலயத்தில் தேர்த்திருவிழா நடைபெற்றது.

ஈரோடு ஸ்டேட் வங்கி சாலையில் பிரசித்தி பெற்ற புனித அமல அன்னை ஆலயம் உள்ளது. ஆலயத்தில் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் தேர்த்திருவிழா நடைபெறும். இந் தாண்டுக்கான தேர்த்திருவிழா கடந்த 6-ம் தேதி கொடி ஏற்றத் துடன் தொடங்கியது. தொடர்ந்து சிறப்பு வழிபாடுகள் நடந்தன.

விழாவின் முக்கிய நிகழ்வான தேர்த்திருவிழா நேற்று நடைபெற்றது. புனித அமல அன்னை ஆலய பங்குத்தந்தையும், ஈரோடு மறை வட்ட முதன்மை குருவுமான ஜான் சேவியர் தலைமையில் திருப்பலி நடைபெற்றது. தொடர்ந்து வேண்டுதல் தேர் எடுக்கப்பட்டது. வழக்கமாக அலங்கரிக்கப்பட்ட தேரில் மாதா சொரூபம் வைக்கப்பட்டு நகரின் முக்கிய சாலை வழியாக ஊர்வலமாக எடுத்து வரப்படும். கரோனா பரவல் காரணமாக வேண்டுதல் தேர் மட்டும் ஆலயத்தை சுற்றி எடுக்கப்பட்டது. வரும் 20-ம் தேதி கொடி இறக்கும் நிகழ்ச்சி நடக்க உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in