Regional01
25 ஆண்டுகள் பணியாற்றிய விடுதி பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க கோரிக்கை
பெரம்பலூர் மாவட்ட பிற்படுத்தப் பட்டோர் மாணவ, மாணவிகள் விடுதி பணியாளர்கள் சங்க மாவட்ட செயற்குழுக் கூட்டம் அச்சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஆர்.சுப்பிரமணியன் தலைமையில் பெரம்பலூரில் நேற்று நடைபெற்றது.
கூட்டத்தில், 25 ஆண்டுகாலம் பணிமுடித்தவர் களுக்கு ரூ.2 ஆயிரம் ஊக்கத் தொகை, பாராட்டுச் சான்றிதழ் வழங்க வேண்டும். புதிதாக பணியில் சேர்ந்த பணியாளர்களுக்கு பணி வரன்முறை செய்து மருத்துவக் காப்பீட்டு அட்டை வழங்க வேண்டும். காலியாக உள்ள காவலர், ஏவலர் பணியிடங்களுக்கு தகுதி வாய்ந்தவர்களை உடனே பணி நியமனம் செய்ய வேண்டும்.
காவலர் இல்லாத விடுதிக ளுக்கு அரசின் அனுமதி பெற்று காவலர்களை பணி நியமனம் செய்ய வேண்டும். பணியா ளர்களுக்கு பாதிப்பு இல்லாமல் கலந்தாய்வு செய்து பணியிட மாறுதல் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
