Regional01
கிணற்றில் விழுந்து சிறுவன் உயிரிழப்பு
கீழ்பென்னாத்தூர் அருகே கிணற்றில் விழுந்து சிறுவன் உயிரிழந்தார்.
தி.மலை மாவட்டம் கீழ்பென் னாத்தூர் அடுத்த கடம்பை பகுதியில் வசிப்பவர் ஏழுமலை. இவரது மகன் கவின்(7). இவர், நேற்று முன்தினம் வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, அங்குள்ள கிணற்றில் கவின் தவறி விழுந்துள்ளார். இதைக்கண்ட பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற கீழ்பென்னாத்தூர் தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். சிறிது நேரத்துக்கு பிறகு உயிரிழந்த நிலையில் சிறுவனின் உடலை மீட்டனர். இதுகுறித்து கீழ்பென்னாத்தூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
