அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி ஆட்சியரிடம் மனு அளித்த எம்எல்ஏ

அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி  ஆட்சியரிடம் மனு அளித்த எம்எல்ஏ
Updated on
1 min read

திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் சு.சிவராசுவிடம், தெற்கு மாவட்ட செயலாளரும், எம்எல்ஏவுமான மகேஷ் பொய்யாமொழி நேற்று முன்தினம் வழங்கினார்.

அந்த மனுக்களில், மணப்பாறையிலுள்ள மாட்டுச் சந்தையை விரிவாக்கம் செய்து அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும். மருங்காபுரி சமத்துவபுரத்திலுள்ள வீடுகளை சீரமைக்க வேண்டும். தகுதியுள்ள அனைவருக்கும் முதியோர் ஓய்வூதியம் வழங்க வேண்டும். கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும், அனைத்து கிராமங்களுக்கும் குடிநீர், தெருவிளக்கு, சாலை, பேருந்து, கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் இடம் பெற்றிருந்தன.

அப்போது, ஒன்றியக் குழு தலைவர்கள் பழனியாண்டி (மருங்காபுரி), அமிர்தவள்ளி ராமசாமி(மணப்பாறை), குணா (வையம்பட்டி), சத்யா கோவிந்தராஜன் (திருவெறும்பூர்) உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in