டிச.16-ல் முதல்வர் வருகை முன்னேற்பாட்டு பணிகள் குறித்து கரூரில் ஆலோசனைக் கூட்டம்

டிச.16-ல் முதல்வர் வருகை  முன்னேற்பாட்டு பணிகள் குறித்து கரூரில் ஆலோசனைக் கூட்டம்
Updated on
1 min read

கரூர் மாவட்டத்தில் நடைபெறும் வளர்ச்சித் திட்டப்பணிகள், கரோனா நோய்த்தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக தமிழக முதல்வர் பழனிசாமி டிச.16-ம் தேதி வருகை தர உள்ளார். இதையடுத்து மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாட்டு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

மாநில போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சியர் சு.மலர்விழி முன்னிலை வகித்தார். கூட்டத்தில், அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசியது: கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் வரும் 16-ம் தேதி நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் முதல்வர் பழனிசாமி புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்.

தொடர்ந்து, கரோனா பரவல் தடுப்பு குறித்து மேற் கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்கிறார். அதைத் தொடர்ந்து, குறு-சிறு மற்றும் நடுத்தர தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் மற்றும் சுயஉதவிக்குழுவினருடன் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெறும் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in