நவகைலாய கோயில்களுக்கு சிறப்பு பேருந்துகள்

நவகைலாய கோயில்களுக்கு சிறப்பு பேருந்துகள்
Updated on
1 min read

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: 2020-2021 -ல் மார்கழி மாத ஞாயிற்றுக்கிழமை தினங்களான 20.12.2020, 27.12.2020, 3.01.2021 மற்றும் 10.01.2021 ஆகிய நாட்களில் தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள நவகைலாய திருக்கோயில்களுக்கு பக்தர்களின் வசதிக்காக, சிறப்பு சேவை பேருந்துகள் இயக்க தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் ஏற்பாடு செய்துள்ளது. இந்த சிறப்பு சேவை பேருந்துகள் காலை 7 மணிக்கு திருநெல்வேலி ஆம்னி பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டு பாபநாசம், சேரன்மகாதேவி, கோடகநல்லூர், குன்னத்தூர், முறப்பநாடு, திருவைகுண்டம், தென்திருப்பேரை, ராஜபதி, சேர்ந்த பூமங்கலம் (புன்னக்காயல்) ஆகிய நவகைலாய திருக்கோயிலுக்கு சென்று இரவுக்குள் திருநெல்வேலி வந்து சேரும்.

திருநெல்வேலி ஆம்னி பேருந்து நிலையத்தில் இந்த சிறப்பு சேவை பேருந்துகளுக்கு காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை அனைத்து நாட்களிலும் முன்பதிவு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. (தொடர்பு எண்: 94875 99456). இதற்கான பயண கட்டணத் தொகை, நபர் ஒருவருக்கு ரூ.500. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in