

கரோனா தடுப்பு நடவடிக் கையாக வரும் 14-ம் தேதிஅமாவாசையன்று மேல்மலைய னூர் அங்காளம்மன் கோயிலில் பக்தர்கள் தரிசனம் தடை செய்யப்படுகிறது. ஊஞ்சல் உற்சவம் ரத்து செய்யப்படுகிறது.
தமிழ்நாடு அரசு போக்குவ ரத்துத்துறை சார்பில் இயக்கப் படும் சிறப்புப் பேருந்துகள் எதுவும் இயக்கப்படாது என்று இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் ராமு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் முதல் மேல்மலையனூர் கோயிலில் அமாவாசை தரிசனம் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.