Published : 12 Dec 2020 03:18 AM
Last Updated : 12 Dec 2020 03:18 AM

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் பொது நல அமைப்பினர் 150 பேர் கைது

டெல்லியில் போராடும் விவசாயிக ளுக்கு ஆதரவு தெரிவித்து திருச்சியில் விவசாய சங்கம் மற்றும் பொதுநல அமைப்புகள் சார்பில் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் முன் நேற்று முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

டெல்லியில் போராடும் விவசாயி களுக்கு ஆதரவு தெரிவித்தும், வேளாண் சட்டங்களை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். புதிய கல்விக் கொள்கையை ரத்து செய்ய வேண்டும். நாடெங்கும் விவசாயிகளின் குரல் ஓங்கி ஒலிக்கும் வகையில், அனைத்து தேர்தல்களிலும் விவசாயிகளுக்கு தனியாக தொகுதிகளை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

சுற்றுச்சூழல் திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வேண் டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தியும் இந்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

அதன்படி, தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ம.ப.சின்னதுரை தலைமையில் சமூக நீதிப் பேரவை, காவிரி உரிமை மீட்புக் குழு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மக்கள் அதி காரம், தமிழ் தேசிய மக்கள் முன் னணி, மகஇக, திவிக, தபெதிக, அமைப்பு சாரா தொழிலாளர் சங்கம், தமிழ்ப் புலிகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்பு களைச் சேர்ந்த திரளானோர், கோரிக்கைகளை வலியுறுத்தி ஜங்ஷன் ரவுண்டானா வழியாக ரயில் நிலையம் நோக்கி நேற்று பேரணியாகச் சென்றனர்.

அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதனால், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக் கும், போலீஸாருக்கும் தள்ளு முள்ளு நேரிட்டது. பின்னர், போராட்டத்தில் ஈடுபட்ட 80 பெண் கள் உட்பட 150 பேரை போலீஸார் கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x