

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், 'புரெவி' புயல் மறுசீரமைப்புப் பணிகள் குறித்து, மின்சார துறை அமைச்சர் பி. தங்கமணி, அமைச்சர்கள் சி.வி.சண்முகம், எம்.சி.சம்பத் ஆகியோர் தலைமையில் நேற்று முன்தினம் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ககன்தீப்சிங்பேடி, சுற்றுலாத்துறை ஆணையர் ராஜேஷ், மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி ,சட்டமன்ற உறுப்பினர்கள் முருகுமாறன், கலைச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
புயலினால் ஏற்பட்ட கனமழையால் உயிரிழந்த 2 பேரின் குடும்பத்திற்கு பேரிடர் நிவாரண நிதியிலிருந்து நிவாரண தொகையாக தலா ரூ.4 லட்சம் வீதம் ரூ.8 லட்சம், பசு மாடு இழந்த 2 பயனாளிகள், கன்றுகள் இழந்த 3 பயனாளிகள், ஆடுகள் இழந்த 5 பயனாளிகள், கூரை வீடுகள் பகுதியாக பாதித்த 16 பயனாளிகள், ஓட்டு வீடு பாதித்த 4 பயனாளிகள் என 32 பயனாளிகளுக்கு நிவாரணத் தொகையாக மொத்தம் 10 லட்சத்து 25 ஆயிரத்து 400 ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது.