கடலூர் மாவட்டத்தில் கனமழையால் பாதிப்பு 32 பேருக்கு ரூ.10.25 லட்சம் நிவாரணத் தொகை வழங்கல்

கடலூரில் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பயனாளிகளுக்கு அமைச்சர்கள் பி. தங்கமணி, சி.வி.சண்முகம்,எம்.சி.சம்பத் ஆகியோர் நிவாரண தொகைக்கான காசோலையை வழங்கினர்.
கடலூரில் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பயனாளிகளுக்கு அமைச்சர்கள் பி. தங்கமணி, சி.வி.சண்முகம்,எம்.சி.சம்பத் ஆகியோர் நிவாரண தொகைக்கான காசோலையை வழங்கினர்.
Updated on
1 min read

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலு வலக கூட்டரங்கில், ‘புரெவி' புயல் மறுசீரமைப்புப் பணிகள் குறித்து, மின்சார துறை அமைச்சர் பி. தங்கமணி, அமைச்சர்கள் சி.வி.சண்முகம், எம்.சி.சம்பத் ஆகியோர் தலைமையில் நேற்று முன்தினம் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ககன்தீப்சிங்பேடி, சுற்றுலாத்துறை ஆணையர் ராஜேஷ், மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி, சட்டமன்ற உறுப்பினர்கள் முருகுமாறன், கலைச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

உயிரிழந்த 2 பேரின்குடும்பத்திற்கு பேரிடர் நிவாரண நிதியிலிருந்து நிவாரண தொகையாக தலா ரூ.4 லட்சம் வீதம் ரூ.8 லட்சம் வழங்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in