

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே உள்ள கண்மணியாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மகேஷ் (40). இவர், கடம்பனேரி புதுக்குடியில் ஒருவரது விவசாயநிலத்தில் குத்தகை அடிப்படையில் மக்காச்சோள சாகுபடி செய்திருந்தார். இங்கு உள்ள விவசாயநிலங்களில் காட்டுப் பன்றிகள் புகுந்து சேதப்படுத்தியதால் அப்பகுதி விவசாயிகள் சட்டவிரோதமாக உயர் அழுத்த மின்சார வேலிஅமைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், தனது விவசாயநிலத்துக்குச் சென்ற மகேஷ்,மின் வேலியில் சிக்கி சம்பவஇடத்திலேயே உயிரிழந்துவிட்டார். அவரது குடும்பத்தினர் போலீஸாருக்கு தெரியாமல் உடலை புதைத்துள்ளனர். கடையநல்லூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.