திருவண்ணாமலை மாவட்டத்தில் நாளை லோக் அதாலத் மாவட்ட நீதிபதி திருமகள் தகவல்

திருவண்ணாமலை மாவட்டத்தில் நாளை லோக் அதாலத் மாவட்ட நீதிபதி திருமகள் தகவல்
Updated on
1 min read

திருவண்ணாமலை மாவட்டத்தில் நாளை (12-ம் தேதி) லோக் அதாலத் நடைபெறும் என மாவட்ட நீதிபதியும் சட்டப்பணிகள் ஆணைக் குழுத் தலைவருமான திருமகள் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தேசிய மற்றும் மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழு சார்பில், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் லோக் அதாலத் நாளை (12-ம் தேதி) நடைபெற உள்ளது. நீதிபதி மற்றும் ஒரு உறுப்பினர் கொண்ட அமர்வு முன்னிலையில் வழக்குகள் நடைபெறும். சாலை விபத்து இழப்பீடு தொடர்பாக நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள், மின்சார பயன்பாடு, வீட்டு வரி, குடிநீர் வரி, ஜீவனாம்சம், நில ஆக்கிரமிப்பு வழக்குகள், தொழிலாளர் நலன், இழப்பீடு வழக்குகள், கல்விக் கடன், வங்கிக் கடன் தொடர்பான வழக்குகள் மற்றும் இதர பொது பயன்பாட்டு வழக்குகள் ஆகியவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

வழக்கு தொடர்ந்தவர்கள் நேரடியாக பங்கேற்று சமாதான மாகவும், விரைவாகவும் முடித்துக்கொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். இழப்பீட்டு தொகை மற்றும் பிற பிரச்சினைகளை இரு தரப்பினர் சம்மதத்துடன் விரைவில் தீர்க்கவும் மக்கள் நீதிமன்றங்கள் வழிவகை செய்யும்” என தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in