

வேலூர் மாவட்டத்தில் இருந்து மாநில சதுரங்க நடுவர்களாக தேர்வு செய்யப்பட்ட 11 பேருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
கடலூரில் கடந்த மார்ச் மாதம் மாநில சதுரங்க நடுவர்களுக்கான தேர்வு நடைபெற்றது. இதில், வேலூர் மாவட்டத்தில் இருந்து சென்றவர்களில் 11 பேர் தேர்வு செய்யப்பட்டனர். கரோனா ஊரடங்கால் இவர்களுக்கு சான்றிதழ் வழங்க முடியாத நிலையில் நேற்று வழங்கப்பட்டது. காட்பாடி காந்திநகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில சதுரங்க சங்க துணைத் தலைவர் மணிகண்டசாமி தேர்வு பெற்ற 11 பேருக்கு சான்றிதழை வழங்கினார். அப்போது, ராய வேலூர் மாவட்ட சதுரங்க கழக செயலாளர் மனோகரன் மற்றும் செல்வராஜ், பாரதி, முருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.