வரும் 20-ம் தேதிக்குள் சர்க்கரை அட்டையை அரிசி அட்டையாக மாற்ற விண்ணப்பிக்கலாம்

வரும் 20-ம் தேதிக்குள்  சர்க்கரை அட்டையை  அரிசி அட்டையாக மாற்ற விண்ணப்பிக்கலாம்
Updated on
1 min read

திருப்பத்தூர், தி.மலை மாவட் டங்களைச் சேர்ந்த குடும்ப அட்டைதாரர்கள் தங்களது சர்க்கரை அட்டையை, அரிசி அட்டை யாக மாற்றிக்கொள்ள வரும் 20-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என ஆட்சியர்கள் சிவன் அருள் (திருப்பத்தூர்), சந்தீப் நந்தூரி (தி.மலை) ஆகியோர் தெரிவித் துள்ளனர்.

இதுகுறித்து திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘திருப்பத்தூர் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் 686 குடும்ப அட்டைகள் சர்க்கரை அட்டைகளாக உள்ளன. தமிழக அரசு சர்க்கரை அட்டைகள் வைத் திருப்போர் தங்களது குடும்ப அட்டைகளை அரிசி அட்டைகளாக மாற்ற விரும்பினால் இணையதளம் வழியாக மாற்றிக்கொள்ளலாம் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

எனவே, திருப்பத்தூர் மாவட் டத்தைச் சேர்ந்த குடும்ப அட்டைகள் வைத்திருப்போர் தங்களுக்கான சர்க்கரை அட்டையை, அரிசி அட்டையாக மாற்ற விரும்பினால், வரும் 20-ம் தேதிக்குள் www.tnpds.gov.in என்ற இணையதள முகவரியிலோ அல்லது அந்தந்த வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள வட்ட வழங்கல் அலுவலரிடம் குடும்ப அட்டைக்கான நகலை வழங்கலாம். இந்த அரிய சந்தர்ப்பத் தினை திருப்பத்தூர் மாவட்ட குடும்ப அட்டைதாரர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்

திருவண்ணாமலை

வேலூர்/ராணிப்பேட்டை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in