Regional01
டெங்கு கொசு ஒழிப்பு பணிக்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும் சேலம் மாநகராட்சி ஆணையர் வலியுறுத்தல்
சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் டெங்கு ஒழிப்பு பணிக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாநகராட்சி ஆணையர் வலியுறுத்தியுள்ளார்.
சேலம் சூரமங்கலத்தில் கொசுப்புழு கண்டறிந்து அழிக்கும் களப்பணியாளர்களுக்கான பணி ஆய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு, மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் தலைமை வகித்து பேசியதாவது:
கொசு புழு ஒழிப்பு
கரோனா விழிப்புணர்வு
இத்துடன் கரோனா வைரஸ் பரவல் தடுப்பு விழிப்புணர்வு பணிகளையும் மேற்கொள்ள வேண்டும். வீடுகளுக்கு வரும் களப்பணியாளர்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில், மண்டல உதவி ஆணையர் (பொ) செல்வராஜ், உதவி பொறியாளர்கள் அன்புசெல்வி, காவிய ராஜ், சுகாதார அலுவலர் மணிகண்டன், சுகாதார ஆய்வாளர் பிரகாஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
