

மார்க்சிஸ்ட் மாவட்டச் செயலாளர் ரா.விஜயராஜன் தலைமை வகித்தார். திமுக மாவட்டச் செயலாளர்கள் பொன்.முத்துராமலிங்கம், கோ.தளபதி, காங்கிரஸ் மாநகர் மாவட்ட நிர்வாகி கார்த்திகேயன், மதிமுக மாநகர் மாவட்டச் செயலாளர் மு.பூமிநாதன், இந்திய கம்யூனிஸ்ட் மாநகர் மாவட்டச் செயலாளர் எம்.சரவணன், பார்வர்ட் பிளாக் மாநிலச் செயலாளர் பி.வி.கதிரவன், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி மாலின், மனித நேய மக்கள் கட்சி இப்ராஹிம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
புதுடெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவாக டிச.8-ம் தேதி நடைபெறவுள்ள பந்த்தில் பங்கேற்பது என முடிவு செய்தனர்.
இதனிடையே உசிலம்பட்டி, திருமங்கலம், மேலூர், அலங்காநல்லூர், ஊமச்சிகுளம், வாடிப்பட்டி உட்பட பல்வேறு ஊர்களில் திமுக கூட்டணிக் கட்சியினர் கொடியுடன் கடை வீதிகளில் நேற்று சென்றனர். வியாபாரிகளிடம் முழு அடைப்பை ஆதரித்து கடைகளை இன்று அடைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.