Published : 08 Dec 2020 03:14 AM
Last Updated : 08 Dec 2020 03:14 AM

ஜன.5-ல் பாபா தரிசன யாத்திரை சிறப்பு ரயில்

கரோனா விழிப்புணர்வு முன்னேற் பாடுகளுடன் ‘ஆங்கிலப் புத்தாண்டு பாபா தரிசன யாத்திரை’ என்ற பெயரில் சிறப்பு சுற்றுலா ரயிலை ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் இயக்குகிறது.

ஜன.5-ம் தேதி நெல்லையில் இருந்து புறப்பட்டு மதுரை, திருச்சி, விழுப்புரம், சென்னை எழும்பூர், மந்திராலயம், பண்டரிபுரம் வழியாக ஷீரடி செல்லும். மந்திராலயம் குரு ராகவேந்திரர் பண் டரிபுரத்தில் பாண்டுரங்கன், சீரடி சாய்பாபா தரிசனம் ஆகியவை ஆறு நாள் சுற்றுலாவில் அடங்கும். ரயில் கட்டணம், உணவு, தங்குமிடம், சுற்றுலாத் தலங்களில் பேருந்து வசதிகளுடன் நபர் ஒருவருக்கு ரூ.5,685 கட்டணமாக நிர்ண யிக்கப்பட்டுள்ளது. இந்தச் சுற்றுலாவுக்கு மதுரை ரயில் நிலையத்தில் முன்பதிவு செய்யலாம். 10 முதல் 65 வயதுக்குட்பட்டவர்கள் முன்பதிவு செய்ய அனுமதிக்கப்படுவர். விவரங்களுக்கு 8287931977 என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழக நிர்வாகம் தெரிவித் துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x