

பாபர் மசூதி இடிப்பு தினத்தை யொட்டி எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் மதுரை தெற்கு வாசல் சின்னக்கடை வீதியில் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர். மாவட்டத் தலைவர் முஜிபுர் ரஹ்மான் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் கமால் பாஷா வரவேற்றார்.
பாபர் மசூதி நில உரிமை விவகாரத்தில் வழிபாட்டுத் தலங் கள் சட்டம்-1991ஐ அமல்படுத்த வேண்டும். பாபர் மசூதியை இடித்தவர்களுக்கு தண்டனை வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியாவின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் முகம்மது இஸ்மாயில், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில துணை பொதுச் செயலாளர் கனியமுதன், ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் மாவட்டத் தலைவர் அப்துல்லா ஸாஆதி ஆகியோர் பேசினர். மாவட்ட துணைத் தலைவர் சுப்பிர மணியன் நன்றி கூறினார்.
திருப்பரங்குன்றம் பஸ் நிறுத்தத் தில் தொகுதி தலைவர் ஆரிப் கான் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பாபர் மசூதி இடிப்பு தினமான நேற்று மதுரையில் முக்கிய வழிபாட்டுத் தலங்கள், பேருந்து நிலையங்களில் போலீஸார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட் டனர்.
மதுரை ரயில் நிலையத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை யாக வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீஸார் தீவிரமாக சோதனை யிட்டனர். மதுரை விமான நிலையத்தில் ஆயுதப்படை துணை கண்காணிப் பாளர் ஜான் நிக்கல்சன் தலைமை யில் 20-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
விருதுநகர்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலர் சதுரகிரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ராமநாதபுரம்