டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவாக மதுரை, வாடிப்பட்டியில் திமுகவினர் ஆர்ப்பாட்டம்வாடிப்பட்டியில் நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பி.மூர்த்தி எம்எல்ஏ உள்ளிட்டோர்.

டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவாக  மதுரை, வாடிப்பட்டியில் திமுகவினர் ஆர்ப்பாட்டம்வாடிப்பட்டியில் நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பி.மூர்த்தி எம்எல்ஏ உள்ளிட்டோர்.
Updated on
1 min read

விவசாயிகளுக்கு ஆதரவாக திமுக வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மதுரை அண்ணா நகரில் நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தில் பேசினார் மாவட்டப் பொறுப்பாளர் பொன்.முத்துராமலிங்கம். படம்:எஸ்.கிருஷ்ணமூர்த்தி புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி, டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், தமிழகம் முழுவதும் திமுகவினர் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.

மதுரை புறநகர் வடக்கு, தெற்கு மாவட்டங்கள் சார்பில் வாடிப்பட்டியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் ஏராளமான விவசாயிகள் மாட்டு வண்டி, டிராக்டருடன் ஊர்வலமாக வந்து பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் செய்தனர். பி.மூர்த்தி எம்.எல்.ஏ., மாவட்டச் செயலாளர் எம்.மணிமாறன் ஆகியோர் தலைமை வகித்தனர்.

மதுரையில் அண்ணா நகர் அம்பிகா திரையரங்கம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் பொன்.முத்துராமலிங்கம், கோ.தளபதி ஆகி யோர் தலைமை வகித்தனர். முன்னாள் மேயர் குழந்தைவேலு, முன்னாள் அமைச்சர் தமிழரசி, பகுதி செயலாளர் அக்ரி கணேசன், மாவட்டப் பொறுப்புக் குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in