

அமெரிக்கன் கல்லூரியின் பசுமைச் சங்கம் சார்பில் வைகை சூழலியல் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உலக மண் தினத்தைக் கொண்டாடினர்.
இதையொட்டி மாணவர்கள் விதைப்பந்துகளைத் தயாரித்தனர். அமெரிக்கன் கல்லூரி முதல்வர் ம.தவமணி கிறிஸ்டோபர் காய்ந்த விதைப் பந்துகளை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் கொடுத்து கடச்சனேந்தல் கண்மாயில் விதைக்கும் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
அவர் பேசும்போது, இந்த விதைப் பந்துகள் தாவரங்களை வளர்ப்பதற்கான எளிதான மற்றும் நிலையான வழியாகும். மிகக் குறைந்த செலவில், உழுதல் அல்லது மண்ணில் துளையிடுதல் போன்ற செயல்பாடுகள் இன்றி மரக் கன்றுகளை வளர்க்க முடியும். இதன்மூலம் சுற்றுச் சூழல் பசுமையாகும் என்றார்.
இந்நிகழ்வை பசுமைச் சங்கத் தலைவர் ராஜேஷ் ஒருங் கிணைத்தார். பேராசிரியர்கள், மாணவர்கள். முனைவர் டாரதீ ஷீலா, டீன் ஜஸ்டின் மனோகர் ஆகியோர் பங்கேற்றனர்.