மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதலான 51 வாகனங்கள் ரூ.21.31 லட்சத்துக்கு ஏலம்

மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதலான  51 வாகனங்கள் ரூ.21.31 லட்சத்துக்கு ஏலம்
Updated on
1 min read

ஈரோடு மாவட்டத்தில் மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 10 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 41 இரு சக்கர வாகனங்கள் என மொத்தம் 51 வாகனங்கள் நேற்று ஈரோடு புதூர் ஆயுதப்படை மைதானத்தில் ஏலத்தில் விடப்பட்டன.

இதில், இருசக்கர வாகனத்திற்கு ரூ.2 ஆயிரம், நான்கு சக்கர வாகனத்திற்கு ரூ.4 ஆயிரம் என முன்பணம் செலுத்திய 200 பேர் ஏலத்தில் பங்கேற்றனர்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை ஏலத்தை தொடங்கி வைத்தார். கூடுதல் எஸ்பி பொன் கார்த்திக், டிஎஸ்பி சண்முகம் முன்னிலையில் ஏலம் நடைபெற்றது. இதில், 41 இருசக்கர வாகனங்கள் ரூ.7 லட்சத்து 41 ஆயிரத்து 131-க்கும், 10 நான்கு சக்கர வாகனங்கள் ரூ.13 லட்சத்து 90 ஆயிரத்து 820 என 51 வாகனங்கள் மொத்தம் ரூ.21 லட்சத்து 31 ஆயிரத்து 951 மதிப்பில் ஏலம் விடப்பட்டன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in