விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து மறியல் செய்த கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது

புதிய வேளாண்  சட்டங்களுக்கு  எதிராக  திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் கம்யூனிஸ்ட்  கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  படம்: மு.லெட்சுமி அருண்
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். படம்: மு.லெட்சுமி அருண்
Updated on
1 min read

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் திருத்த சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும், டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும் திருநெல் வேலி வண்ணார்பேட்டை செல்லப்பாண்டியன் பாலம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் , இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சிகள் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. அவர்களை போலீஸார் கலைக்க முயன்றபோது, தள்ளுமுள்ளு மற்றும் வாக்குவாதம் ஏற்பட்டது. மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 48 பேர் கைது செய்யப்பட்டனர்.

எட்டயபுரம்

கோவில்பட்டி

நாகர்கோவில்

நாகர்கோவிலில் வடசேரி உழவர் சந்தை முன்பிருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பேரணியாக சென்று, தலைமை தபால் நிலையத்தை அடைந்தனர். அங்கு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டச் செயலாளர் செல்லசுவாமி தலைமையில், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளர் இசக்கிமுத்து, மார்க்சிஸ்ட் செயற்குழு உறுப்பினர் நூர்முகமது உட்பட 168 பேர் கைது செய்யப்பட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in