வாக்கு இயந்திரங்கள் வைக்க ரூ. 4 கோடியில் புதிய கட்டிடம் நெல்லை ஆட்சியர் ஆய்வு

திருநெல்வேலியில் கட்டப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பதற்கான கட்டிடத்தை  ஆட்சியர் விஷ்ணு ஆய்வு செய்தார்.
திருநெல்வேலியில் கட்டப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பதற்கான கட்டிடத்தை ஆட்சியர் விஷ்ணு ஆய்வு செய்தார்.
Updated on
1 min read

திருநெல்வேலி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் பொதுப் பணித்துறை மற்றும் பராமரிப்பு கோட்டம் மூலம் புதிதாக ரூ.4.35 கோடி மதிப்பில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர சேமிப்பு கிடங்கு கட்டிடம் கட்டும் பணி நடைபெறுகிறது. தேர்தல்களில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பாக இருப்பு வைக்க ஏதுவாக 738 ச.மீட்டர் பரப்பளவில் தரைதளமும், 738 ச.மீட்டர் பரப் பளவில் முதல் தளமும், 17 ச.மீட்டர் இடைவெளியுடனும் நவீன வசதிகளுடன் புதிய கட்டிடம் கட்டப்படுகிறது. மின் தூக்கி வசதி, காவலர் அறை, கழிப்பறை, சாய்வு தளம் போன்ற வசதிகள் செய்யப்படுகின்றன. இக் கட்டிடத்தை ஆட்சியர் விஷ்ணு ஆய்வு செய்தார். ஜனவரி இறுதி வாரத்தில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்று, ஆட்சியர் தெரிவித்தார். பொதுப் பணித்துறை (கட்டிடங்கள்) செயற்பொறியாளர் ஜெயராமன், உதவி செயற்பொறியாளர் ஜெயந்தி உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in