கூட்டுறவு பணியிடங்களுக்கான தேர்வு விடைகள் வெளியீடு

கூட்டுறவு பணியிடங்களுக்கான தேர்வு விடைகள் வெளியீடு
Updated on
1 min read

திருச்சி மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு ஆள்சேர்ப்பு நிலையம் மூலம் நடத்தப்பட்ட உதவியாளர் மற்றும் எழுத்தர் தேர்வுக்கான விடைகள் நேற்று வெளியிடப்பட்டுள்ளன.

இதுகுறித்து திருச்சி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் க.பா.அருளரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

திருச்சி மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு நிறுவனங்களில் உதவியாளர் மற்றும் எழுத்தர் பணியிடங்களுக்கு நவ.28,29 தேதிகளில் தேர்வுகள் நடத்தப்பட்டன. இந்த தேர்வுகளை எழுதிய விண்ணப்பதாரர்கள் கூட்டுறவு ஆள்சேர்ப்பு நிலைய இணையதளத்தில் (www.trydrb.in) விடைகளை சரிபார்த்துக் கொள்ளலாம்.

உத்தேச விடைகள் மீது ஏதேனும் மறுப்பு இருப்பின் டிச.12-ம் தேதி மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பதாரரின் தேர்வு நுழைவுச்சீட்டு எண், வினா எண், வினாவின் உத்தேச விடை ஆகியவற்றை குறிப்பிட்டு அதே இணையதள முகவரிக்கு தங்களது மறுப்பை அனுப்பலாம்.

விண்ணப்பதாரர்கள் குறிப்பிடும் விடைக்கு உரிய ஆவணங்களை பிடிஎப் (PDF) பைலாக இணைத்து அனுப்ப வேண்டும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in