

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் நேற்று மாலையில் மழை பெய்தது. இம்மழை இரவிலும் நீடித்தது.
திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி சேரன் மகாதேவியில் 0.20 மி.மீ., பாளையங்கோட்டையில் 2.40 மி.மீ., திருநெல்வேலியில் 1 மி.மீ. மழை பதிவாகியிருந்தது. பகல் முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அணைப்பகுதிகளில் போதிய மழை பெய்யவில்லை என்பதால், அணைகளின் நீர்மட்டத்தில் பெரிய மாறுதல் இருக்கவில்லை. பாபநாசம் அணை நீர்மட்டம் 122.95 அடி, சேர்வலாறு நீர்மட்டம் 129.46 அடி, மணிமுத்தாறு நீர்மட்டம் 96.40 அடி, வடக்கு பச்சையாறு- 19 அடி, நம்பியாறு- 10.62 அடி, கொடுமுடியாறு நீர்மட்டம் 34.50 அடியாக இருந்தது.
பாளையங்கோட்டை மூர்த்தி நாயனார் தெருவைச் சேர்ந்தவர் இருதயராஜ் (70). இவரது வீட்டின் மேல்தளம் இடிந்து விழுந்தது. இதில் இருதயராஜ் காயமடைந்தார். பாளையங்கோட்டை தீயணைப்பு படையினர் அங்குசென்று இருதயராஜை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆயுதப்படை காவலர்கள்
மாவட்டத்தில் பரவலாக மழை பெய்துவரும் நிலையில் நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். பொட்டல் பகுதியில் டிராக்டர்கள் மூலம் நிலத்தை பண்படுத்தும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று மாலையில் பலத்த மழை பெய்தது. இம்மழை இரவிலும் நீடித்தது
தென்காசியில் மழை
இந்நிலையில் தென்காசி மாவட்டத்தில் நேற்று மாலை முதல் மிதமான மழை பெய்தது.