

பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவ கல்லூரி மருத்துவர் ஜி.சுபாஷ் சந்திரன் கரோனா மேலாண்மைக்கான விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
உலக தமிழ் வர்த்தக கழகம் , தமிழ்நாடு இந்திய மருத்துவத் துறை, தேசிய சித்த மருத்துவ கழகம், மத்திய சித்த ஆராய்ச்சி கழகம் இணைந்து உலக அளவில் சித்த மருத்துவத்தின் மூலம் கரோனா மேலாண்மையில் தன் னார்வலராக திறம்பட பணி யாற்றிய 14 பேருக்கு விருது வழங்குகிறது.
கரோனா பரவாமல் தடுத்தது, நோய் கட்டுப்பாட்டு பகுதியில் நிலவேம்பு, கபசுரக் குடிநீர் விநியோ கித்தது, பாதிக்கப்பட்ட நபர்களின் குடும்பம், அவர்களோடு தொடர்பு டையவர்களை கண்காணித்து, அவர்களுக்கு தகுந்த முறையில் சித்த மருத்துவ நெறிமுறைகளை கையாண்டது போன்ற சிறப்பு களுக்காக சுபாஷ் சந்திரனுக்கு விருது வழங்கப் படுகிறது.