பாளை. ராஜகோபால சுவாமி கோயில் புதிய தேர் திருப்பணி தொடக்கம்

பாளையங்கோட்டை வேதநாராயணர் அழகிய மன்னார்  ராஜகோபால சுவாமி  திருக்கோயில்  புதிய  திருத்தேர்  திருப்பணி தொடங்கியது.  படம்: மு.லெட்சுமி அருண்
பாளையங்கோட்டை வேதநாராயணர் அழகிய மன்னார்  ராஜகோபால சுவாமி திருக்கோயில் புதிய திருத்தேர் திருப்பணி தொடங்கியது. படம்: மு.லெட்சுமி அருண்
Updated on
1 min read

பாளையங்கோட்டை வேதநாரா யணர்  அழகிய மன்னார் ராஜகோபால சுவாமி திருக்கோயில் புதிய திருத்தேர் திருப்பணி தொடங் கியது.

விழாவுக்கு  கோபாலன் கைங்கர்ய சபா தலைவர் கே.ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். பொருளாளர் சத்தியமூர்த்தி வரவேற்றார். திருக்கோயில் திருத்தேர் திருப் பணியை இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை இணை ஆணையர் கி.பரஞ்சோதி தொடங்கிவைத்தார். திருக்கோயில் நிர்வாக அதிகாரி சிவசங்கரி மற்றும் பக்தர்கள் கலந்துகொண்டனர்.

முன்னதாக சிறப்பு பூஜை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து திருத்தேர் திருப்பணி தொடங்கிவைக்கப்பட்டது. இந்த திருத்தேர் 36 அடி உயரம் 16 அடி அகலம் 35 டன் எடை கொண்டதாக அமைய இருக்கிறது. திருத்தேர் சக்கரம் ஐந்து அடி உயரம் கொண்டதாக இருக்கும். ஐந்து அடுக்குகள் கொண்ட அழகு வேலைப்பாடுகளுடன் தேர் அமைகிறது. கஜேந்திரன் ஸ்தபதி தலைமையில் கலை விற்பன்னர்கள் தேர் திருப்பணியை மேற்கொள்கின்றனர். சபா செயலாளர் ஆர்.விநாயகராமன், உப தலைவர் உ.வே.ரெங்கன் சுவாமி, துணைத் தலைவர் ராமச்சந்திரன் பங்கேற்றனர். கவிஞர் கோ.கணபதி சுப்பிரமணியன் தொகுத்து வழங்கினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in