கடலூர் மாவட்டத்தில் காவல் நிலையங்களில் தயார் நிலையில் மழை மீட்பு உபகரணங்கள்

ரெட்டிச்சாவடி காவல்நிலையத்தில்  மழை மீட்பு உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ள போலீஸார்.
ரெட்டிச்சாவடி காவல்நிலையத்தில் மழை மீட்பு உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ள போலீஸார்.
Updated on
1 min read

கனமழை காரணமாக கடலூர் மாவட்ட காவல் நிலையங்களில் மழை மீட்பு உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளது.

புரெவி புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில்

கடலூர் மாவட்டத்தில் உள்ள 46 காவல்நிலையங்களிலும் மண்வெட்டி, மரம் அறுக்கும் வாள், கயிறு, ஜெசிபி இயந்திரம் உள்ளிட்ட மழை மீட்பு உபகரணங்கள் எஸ்பி ஸ்ரீ அபிநவ் உத்தரவு படி தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மழை தண்ணீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்கவும் எஸ்பி உத்தரவிட்டுள்ளார்.

குள்ளஞ்சாவடி காவல் நிலையத்துக்கு உட்பட்ட டி.பாளையம் பகுதியில் மழை நீர் தேங்கி நின்றுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த குள்ளஞ்சாவடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் செல்வம் தலைமையிலான போலீஸார் அப்பகுதி சென்று ஜெசிபி மூலம் மழை தண்ணீரை வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். போலீஸாரின் இந்த நடவடிக்கை அப்பகுதி மக்களிடம் வரவேற்பை பெற்றது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in