

மரக்காணம் பகுதி கடலில், நேற்று வழக்கத்திற்கு மாறாக 10 அடி உயரம் வரையில் அலைகள் ஆக்ரோஷமாக எழும்பி கொந்தளிப்புடன் காணப்பட்டது. சுமார் 20 மீட்டர் தூரம் வரையில் கடல் பகுதியில் இருந்து உள்ளோக்கி அலைகள் கரையை தாக்கின. இதன் காரணமாக எக்கியர்குப்பம் மீனவர் கிராமத்தில் கரையில் நிறுத்தப்பட்டிருந்த 10-க்கும் மேற்பட்ட படகுகள் சேதம் அடைந்துள்ளன. ஏராளமான வலைகளை அலைகள் இழுத்து சென்றதாக அப்பகுதி மீனவர்கள் தெரிவித்தனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று காலை பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்): விழுப்புரம் 43, வானூர் 71,திண்டிவனம் 63, மரக்காணம் 82, செஞ்சி 36, திருவெண்ணைநல்லூர் 21 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.