புயலால் தூத்துக்குடி-சென்னை, மைசூர் ரயில்கள் மதுரையில் இருந்து இயக்கம்

புயலால் தூத்துக்குடி-சென்னை, மைசூர் ரயில்கள் மதுரையில் இருந்து இயக்கம்
Updated on
1 min read

புரெவி புயல் காரணமாக சென்னை எழும்பூர்-தூத்துக்குடி (வண்டி எண் 02693), மைசூர்-தூத்துக்குடி (வண்டி எண் 06236) ஆகிய சிறப்பு ரயில்கள் மதுரை வரை மட்டுமே இயக்கப்படும்.

தூத்துக்குடியில் இருந்து இன்று (டிச.4) புறப்பட வேண்டிய தூத்துக்குடி-சென்னை எழும்பூர் (வண்டி எண் 02694), தூத்துக்குடி-மைசூர் (வண்டி எண் 06235) ஆகிய சிறப்பு ரயில்களும் மதுரையில் இருந்து இயக்கப்படும். இத்தகவலை மதுரை கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in