

திருச்சி மாவட்டத்தில் 2021-22-ம் நிதியாண்டுக்கு நபார்டு வங்கி தயாரித்த ரூ.10,811.19 கோடிக்கான கடன் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு அண்மையில் வெளியிட்டார்.
தமிழகத்தின் ஊரக மற்றும் வேளாண்மை வளர்ச்சிப் பணிகளில் முக்கியப் பங்கு வகிக்கும் நபார்டு வங்கி திருச்சி மாவட்டத்தில் கிடைக்கபெற்ற வளம் சார்ந்த தகவல்களை சேக ரித்து அதனடிப்படையில் வரும் நிதியாண்டுக்கு ரூ.10,811.19 கோடிக்கான கடன் திட்டத்தை வெளியிட்டுள்ளது.
கடன் திட்டத்தை வெளியிட்டு ஆட்சியர் சு.சிவராசு கூறியது:
வேளாண்மையில் நீண்டகால கடன் வழங்குவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து இத்திட்டத்தில் விளக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற கடன் வசதிகள் வேளாண்மை அடிப்படை கட்டுமான வசதிகளைப் பெருக்கி விவசாயத்தை லாபகர மான வளம் நிறைந்த தொழிலாக மாற்ற உதவும் என்றார்.
நபார்டு வங்கியின் மாவட்ட வளர்ச்சி மேலாளர் நா.மு. மோகன் கார்த்திக் பேசுகையில், ‘‘இந்த கடன் திட்ட அறிக்கை, பல அரசுத்துறைகள், வங்கிகள் மற்றும் அனைத்துத்துறை சார்ந்த அதிகாரிகளின் ஆலோசனைகள் மற்றும் புள்ளிவிவரங்களின் அடிப்படையிலும், விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் மத்திய அரசின் நோக்கத்தை கருத்தில் கொண்டும் தயாரிக் கப்பட்டுள்ளது’’ என்றார்.
இந்த நிகழ்வில், வேளாண்மை இணை இயக்குநர் ஆறு.பெரியகருப்பன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சு.சாந்தி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஜி.சத்தியநாராயணன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.