Published : 03 Dec 2020 03:15 AM
Last Updated : 03 Dec 2020 03:15 AM

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக மத்திய மண்டலத்தில் பல்வேறு கட்சியினர் போராட்டம்

திருச்சி

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக மத்திய மண்டலத்தில் நேற்று பல்வேறு கட்சிகள், அமைப்புகளின் சார்பில் ரயில் மறியல், சாலை மறியல், ஆர்ப் பாட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன.

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும் திருச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியி னர் மற்றும் அதன் சார்பு அமைப் பினர் கடந்த 2 நாட்களாக போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், 3-வது நாளான நேற்று ஜீயபுரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அந்தநல்லூர் ஒன்றியச் செயலாளர் வினோத் மணி தலைமையில் ரயில் மறியலுக்குச் சென்றவர்களை போலீ ஸார் தடுத்து நிறுத்தியதால், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, சாலையில் அமர்ந்து ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்ட 32 பேரை போலீஸார் வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்று கைது செய்தனர்.

இதேபோல, பாலக்கரை பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பகுதிச் செயலாளர்கள் ஆர்.சிவக்குமார், எம்.ஐ.ரபீக் அகமது ஆகியோர் தலைமையில், வேர் ஹவுஸ் மேம்பாலப் பகுதியில் ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 80 பேரை போலீஸார் கைது செய்தனர்.

திருச்சி எடமலைப்பட்டிப்பு தூரில் உள்ள தேசியமயமாக்கப் பட்ட வங்கிக் கிளையை முற்றுகை யிடுவதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பகுதிச் செயலாளர் ஏ.வேலுச்சாமி தலைமையில், சடலம்போல ஒருவரை பாடையில் படுக்க வைத்து ஊர்வலமாக தூக்கிச் சென்றனர். அவர்களை போலீஸார் தடுத்ததால், சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 25 பேரை போலீஸார் கைது செய்தனர்.

இதேபோல, காங்கிரஸ் மாநகர் மாவட்டத் தலைவர் வி.ஜவஹர் தலைமையில், உறையூர் குழுமணி சாலையில் உள்ள டாக்கர் பங்களா அருகில் இருந்து நாச்சியார் கோயில் சாலை சந்திப்பு வரை ஏர் கலப்பை பேரணி நடைபெற்றது. தொடர்ந்து, சாலை மறியலில் ஈடுபட முயன்ற ஜவஹர், திருச்சி வேலுச்சாமி, காங்கிரஸ் இளைஞரணி அகில இந்திய செயலாளர் லெனின், முன்னாள் மேயர் சுஜாதா உட்பட 54 பேரை போலீஸார் கைது செய்தனர். மேலும், உறையூர் குறத்தெரு பகுதியில் திமுக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பிலும், குழுமணி சாலையில் காங்கிரஸ் சார்பிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

அரியலூர் அண்ணா சிலை அருகே விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பினர் நடத்திய ஆர்ப் பாட்டத்தில், கூட்டமைப்பின் மாவட்டத் தலைவர் உலகநாதன், திமுக மாவட்டச் செயலாளர் எஸ்.எஸ்.சிவசங்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அரியலூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு மாநிலத் தலைவர் பூ.விசுவநாதன் தலைமையில் ஏர் கலப்பையுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவ சாயிகள் சங்கத்தினர் 40 பேர், பின்னர் சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் அரியலூர் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.

அரியலூரில் வி.கைகாட்டி ரவுண்டானாவில் காங்கிரஸ் சார்பில் மாவட்டத் தலைவர் ஜி.ராஜேந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம், ஏர் கலப்பை பேரணி நடைபெற்றது.

கரூர் மாவட்டம் தரகம்பட்டி பேருந்து நிலையம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்டப் பொருளாளர் பி.ராம மூர்த்தி தலைமையில் நடைபெற்ற சாலை மறியலில் பங்கேற்ற 32 பேரை சிந்தாமணிப்பட்டி போலீஸார் கைது செய்தனர்.

கரூர் மாவட்ட தள்ளுவண்டி தரைக்கடை தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கிளைத் தலைவர் புவனேஸ்வரி தலைமையில் வெங்கமேடு எம்ஜிஆர் சிலை முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங் கேற்றவர்கள் மீது தொற்றுநோய் பரவல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வெங்கமேடு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

புதுக்கோட்டை ஆட்சியர் அலுவ லகம் அருகே விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ஏ.ராமையன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அறந்தாங்கியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாவட்டச் செயலாளர் த.செங்கோடன் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் வெ.ஜீவகுமார் தலைமையில் முற்றுகைப் போராட் டத்தில் ஈடுபட்ட 38 பேரை போலீஸார் கைது செய்தனர். அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பில், தஞ்சாவூர் ரயிலடியில் ஒருங்கிணைப்புக்குழு வீரமோகன் தலைமையில் நடைபெற்ற தொடர் முழக்க ஆர்ப்பாட்டத்தில், இந்திய கம்யூனிஸ்ட் தேசியக்குழு உறுப்பினர் சி.மகேந்திரன் உள்ளிட் டோர் கலந்துகொண்டனர். இதேபோல, பட்டுக்கோட்டை, கும்ப கோணத்திலும் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தஞ்சாவூர் ரயில் நிலையத்தை முற்றுகையிட திரண்ட தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தி னரை போலீஸார் தடுத்ததால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாநிலத் தலைவர் த.புண்ணியமூர்த்தி தலைமையில் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். தஞ்சாவூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் டி.ஆர்.லோகநாதன் தலைமையில், திருவையாறு பேருந்து நிலையத்தி லிருந்து ஏர் கலப்பையுடன் ஊர்வலமாக புறப்பட்டுச் சென்ற 62 பேரை போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாகை வட்டாட்சியர் அலு வலகம் முன் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றியச் செயலாளர் பாண்டியன் தலைமை வகித்தார்.

அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பில் திருவாரூர் புதிய பேருந்து நிலையம் அருகிலிருந்து விவசாயிகள் பேரணியாக நடந்துசென்று ஆட்சியர் அலுவலகம் முன் போராட்டத் தில் ஈடுபட்டனர். மாவட்ட ஒருங்கி ணைப்பாளர் பி.எஸ். மாசிலாமணி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் வி.எஸ்.கலியபெருமாள், விவசாயிகள் நலச் சங்கத் தலைவர் சேதுராமன் ஆகியோர் தலைமை வகித்தனர். காரைக்கால் புதிய பேருந்து நிலையம் அருகே மாவட்டச் செயலாளர் எஸ்.எம்.தமீம் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்ட 33 பேரை போலீஸார் கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x