Published : 03 Dec 2020 03:15 AM
Last Updated : 03 Dec 2020 03:15 AM

பாளை. சவேரியார் பேராலய திருவிழாவில் சப்பர பவனி

பாளையங்கோட்டை தூய சவேரியார் பேராலய திருவிழா வின் முக்கிய நிகழ்வான புனிதரின் சப்பர பவனி நடைபெற்றது.

இந்த பேராலயத்தில் ஆண்டு தோறும் 10 நாட்கள் திருவிழா நடத்தப்படும். இவ்வாண்டுக்கான திருவிழா கடந்த 24-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தை தொடர்ந்து பாளையங்கோட்டை மறைமாவட்ட முன்னாள் ஆயர் ஆ. ஜூடு பால்ராஜ் தலைமையில் திருப்பலி நடைபெற்றது. அருட்தந்தை எம். அருள் மறையுரை வழங்கினார். தொடர்ந்து விழா நாட்களில் தினமும் காலையிலும், மாலையிலும் திருப்பலி மறையுரை நடைபெற்றது. விழாவின் 9-ம் நாளான நேற்று மாலையில் சிறப்பு மாலை ஆராதனையும், நற்கருணை ஆசீரும் தொடர்ந்து புனித சவேரியாரின் திருவுருவ பவனியும் நடைபெற்றது. விழாவின் 10-ம் நாளான இன்று காலையில் திருவிழா சிறப்பு திருப்பலி நடைபெறுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x