திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள். படம்: மு.லெட்சுமி அருண்
திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள். படம்: மு.லெட்சுமி அருண்

மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

Published on

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் தர்ணாவில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளிகள் 25 பேர் கைது செய்யப்பட்டனர்.

மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித் தொகையாக ரூ.3 ஆயிரம், கடுமையாக ஊனமுற்றவர்களுக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். தனியார் துறைகளில் 5 சதவீதம் மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். மாற்றுத் திறனாளிகள் அனைவருக்கும் இலவச வீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரி க்கைகளை வலியுறுத்தி திருநெல்வேலி மாவட்டத்தில் திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, முக்கூடல் ஆகிய இடங்களில் மாற்றுத் திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருநெல்வேலியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகள் அலுவலகம் முன் நடைபெற்ற போராட்டத்தில் சங்க மாவட்ட தலைவர் செல்வசு ந்தரி, செயலாளர் குமாரசாமி, பொருளாளர் நம்பிராஜன், நிர்வாகி தியாகராஜன் தலைமையில் பலர் பங்கேற்றனர். போராட்டம் நடத்திய 25 பேரை போலீஸார் கைது செய்தனர்.

தூத்துக்குடி

இதுபோல், திருச்செந்தூரில் 26, வைகுண்டத்தில் 91, கோவில்பட்டியில் 70, கழுகு மலையில் 74, விளாத்திகுளத்தில் 38 பேர் என மாவட்டம் முழுவதும் 6 இடங்களில் 152 பெண்கள் உள்ளிட்ட 346 பேர் கைது செய்யப் பட்டனர்.

கோவில்பட்டி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in