

மதுரை கோ.புதூர் பகுதியிலுள்ள கே.கே.என். சாலையைச் சேர்ந்தவர் நவரோஷ் (43). இவரது குடும்ப நண்பர்களான ரகுநாதன், சந்திரன் ஆகியோர் நவரோஷிடம் 2018 செப்டம்பர் முதல் டிசம்பர் வரை திரைப்படம் எடுப்பதாகக் கூறி சிறிது, சிறிதாக ரூ. 1.83 கோடி கடன் வாங்கினர். ஆனால், கடன் தொகையைத் திருப்பித் தரவில்லை. பணத்தைக் கேட்டபோது தொடர்ந்து ஏமாற்றி வந்தனர்.
இதுகுறித்து நவரோஷ் கோ. புதூர் போலீஸில் புகார் கொடுத்தார். இதன்பேரில் ரகுநாதன், சந்திரன் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.