அமமுக சார்பில் திருச்சி, பெரம்பலூரில் தேர்தல் அறிக்கை கருத்துக் கேட்புக் கூட்டம்

அமமுக சார்பில் திருச்சி, பெரம்பலூரில் தேர்தல் அறிக்கை கருத்துக் கேட்புக் கூட்டம்
Updated on
1 min read

திருச்சி மாநகர் மாவட்ட அமமுக சார்பில் 2021 சட்டப்பேரவைத் தேர்தல் பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் மற்றும் தேர்தல் அறிக்கை குறித்த கருத்துக் கேட்பு மற்றும் ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் நேற்று நடைபெற்றது.

கட்சியின் திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் ஜெ.சீனி வாசன் தலைமை வகித்தார். மாநிலப் பொருளாளர் ஆர்.மனோ கரன், அம்மா பேரவைச் செய லாளர் மாரியப்பன் கென்னடி, வழக்கறிஞர் பிரிவு செயலாளர் வேலு கார்த்திகேயன், அமைப்புச் செய லாளர் சாருபாலா தொண்டை மான், செய்தித் தொடர்பாளர் அதி வீரராமபாண்டியன் ஆகியோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் மாரியப்பன் கென் னடி பேசும்போது, “மக்களவைத் தேர்தலில் 5.5 சதவீதம் வாக்குகளை அமமுக பெற்றது. ஜனவரி மாதம் முதல் கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி.தினகரனின் சுற்றுப்பயணம் தொடங்க உள்ளார். சசிகலா வெளியே வரும்போது, தமிழக அரசியலில் மிகப் பெரிய மாற்றம் ஏற்படும்” என்றார்.

பெரம்பலூரில்...

கட்சியின் பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் எஸ்.கார்த்திகேயன் தலைமை வகித்தார். இதில், அமைப்புச் செயலாளர்கள் ஆர்.தங்கதுரை, பண்ணைவயல் சு.பாஸ்கர்,வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் குலோத்துங்கன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

முன்னதாக, பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள பெரியார், அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு கட்சி யின் பொருளாளர் ஆர்.மனோ கரன் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in