நூலக வாசகர் வட்டத்துக்கு விருது

நூலக வாசகர் வட்டத்துக்கு விருது
Updated on
1 min read

தேசிய நூலக வார விழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் மாவட்ட அளவில் சிறந்த நூலகங்களுக்கு டாக்டர் எஸ். ஆர். அரங்கநாதன் விருதும், சிறந்த வாசகர் வட்டத்துக்கு நூலக ஆர்வலர் விருதும் வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டு கரோனா தொடர் நடவடிக்கையை முன்னிட்டு 5 நல் நூலகர்களுக்கு மட்டும் தமிழக முதல்வர் விருது வழங்கினார்.

மற்ற அனைத்து விருதுகளும் மாவட்ட ஆட்சியர்கள், அந்தந்த மாவட்டங்களில் வழங்குவார்கள் என்று அறிவிக்கப்பட்டது.

மாதம்தோறும் சிறப்பு கூட்டம் நடத்துவது, போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி, இலவச நூலக உறுப்பினர் சேர்த்து வாசிப்பு பழக்கத்தை அதிகப்படுத்துவது மற்றும் இதுவரை நூலகர்கள் ஒத்துழைப்புடன் 262 புலவர்கள் சேர்க்கப்பட்டு, ரூ.2.62 லட்சம் நூலக நிதியில் சேர்த்தது போன்ற பணிகளுக்காக பாளையங்கோட்டை மாவட்ட மைய நூலகத்தின் வாசகர் வட்டத்துக்கு நூலக ஆர்வலர் விருது வழங்கப்படுகிறது. வாசகர் வட்ட தலைவர் அ.மரியசூசை, துணைத்தலைவர் கோ.கணபதி சுப்பிரமணியன் உள்ளிட்டோரை மாவட்ட நூலக அலுவலர் இரா.வயலட், கண்காணிப்பாளர் மு.சங்கரன், நூலக ஆய்வாளர் மி.கணேசன், மாவட்ட மைய நூலகர் இரா.முத்துலட்சுமி உள்ளிட்டோர் பாராட்டினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in