விழுப்புரத்தில் சிகிச்சைக்குப் பின் பேரறிவாளன் ‘டிஸ்சார்ஜ்’

விழுப்புரம் தனியார் மருத்துவமனைக்குள் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் மருத்துவ பரிசோதனைக்கு வீல் சேரில் அழைத்து செல்லப்படும் பேரறிவாளன்.
விழுப்புரம் தனியார் மருத்துவமனைக்குள் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் மருத்துவ பரிசோதனைக்கு வீல் சேரில் அழைத்து செல்லப்படும் பேரறிவாளன்.
Updated on
1 min read

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி ஆயுள் தண்டனை கைதியாக சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன் உடல் நலக்குறைவால் பாதிக் கப்பட்டுள்ளார். இதையடுத்து அவரது தாயார் அற்புதம்மாள் மனுத் தாக்கல் செய்ததால், பேரறிவாளனை 30 நாட்களில் பரோலில் விடுவிக்க உயர்நீதி மன்றம் அனுமதி அளித்தது.கடந்த அக்டோபர் மாதம் 9-ம் தேதிபேரறிவாளன் பரோலில் விடுவிக்கப் பட்டார்.

மீண்டும் பரோலை நீடிக்க வேண்டி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. வருகிற 7-ம் தேதி வரை பரோலை நீடித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த 28-ம் தேதி மாலை விழுப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பேரறிவாளன் தன் தாயார் அற்புதம்மாளுடன் வந்தார். அவருக்கு மருத்துவபரிசோதனைகள் மேற்கொள்ளப் பட்டன. அவருக்கு சிறுநீரக அறுவைசிகிச்சை செய்யப்பட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவர் மீண்டும் நேற்று மாலை ஜோலார்பேட்டைக்கு புறப்பட்டு சென்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in