

டிச.4-ல் மதுரை வரும் முதல்வர் பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படும் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.
மதுரையில் கரோனா நோயாளிகளுக்கு உணவு வழங்கும் அம்மா கிச்சன் கடந்த 5 மாதங்களுக்கு முன் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் முயற்சியால் தொடங்கப்பட்டது.
அம்மா சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பில் கரோனா நோயாளிகளுக்கு தினமும் 5 வேளை உணவு வழங்கப்பட்டது. இதுவரை 9 லட்சம் உணவு, 6 லட்சம் தானிய வகைப் பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன. தொற்று குறைந்த நிலையில் அம்மா கிச் சனின் 150-வது நாள் மற்றும் நிறைவு விழா தொழில் வர்த்தக சங்கக் கட்டிடத்தில் நேற்று நடந்தது. சிறப்பு அழைப்பாளராக அதிமுக மாநிலச் செய்தி தொடர் பாளர் மருது அழகுராஜா, எம்எல்ஏக்கள் ராஜன்செல்லப்பா, மாணிக்கம், சரவணன், நீதிபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விழாவில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியது:
அதிமுகவில் ஜனநாயக ரீதி யில் முதல்வர் வேட்பாளரை அறி வித்துள்ளோம். திமுகவில் வாரிசு அரசியல் நடத்தி வருகின்றனர்.
கரோனா தொற்று ஒரு சதவீதத்துக்குக் கீழ் வந்ததால், அம்மா கிச்சன் திட்டம் நிறைவுக்கு வந்துள்ளது. தேவையெனில் எந்த நேரமும் இத்திட்டம் மீண்டும் தொடங்கப்படும்.
புதிய ஆட்சியர் அலுவலகக் கட்டிடம், பெரியாறு அணையிலி ருந்து மதுரைக்கு குடிநீர் வழங்கும் திட்டம் போன்றவற்றைத் தொடங்கி வைக்க முதல்வர் பழனிசாமி டிச.4-ம் தேதி மதுரை வருகிறார். அவருக்கு அதிமுக சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.