லட்சுமி விலாஸ் வங்கியை இணைக்க எதிர்ப்பு ரிசர்வ் வங்கி ஆளுநருக்கு கடிதம்

லட்சுமி விலாஸ் வங்கியை இணைக்க எதிர்ப்பு ரிசர்வ் வங்கி ஆளுநருக்கு கடிதம்
Updated on
1 min read

வெளிநாட்டு வங்கியுடன் லட்சுமி விலாஸ் வங்கியை இணைக் கும் முடிவைக் கைவிட சுதேசி விழிப்புணர்வு இயக்கம் வலி யுறுத்தி உள்ளது.

இது தொடர்பாக அந்த இயக்கத்தின் தமிழக அமைப்பாளர் எச். ஆதிசேஷன், ரிசர்வ் வங்கி ஆளுநருக்கு அனுப்பிய கடிதத் தில் கூறியிருப்பதாவது:

சிங்கப்பூரின் டிபிஎஸ் வங்கி யுடன் லட்சுமி விலாஸ் வங்கியை இணைக்க மத்திய ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. லட்சுமி விலாஸ் வங்கியின் கட்டமைப்பு மற்ற வெளிநாட்டு வங்கிகளின் கட்டமைப்புகளை விட பெரியது. வெளிநாட்டு வங்கிகள் தங்களின் கிளைகளை இந்தியாவில் தொடங்க விதிகளை பின்பற்றாமல் முறைகேடாக நுழைய முயல்கின்றன.

இந்தியாவில் 1961 முதல் 81 வங்கி இணைப்புகள் நடந்துள்ளன. வங்கி தேசிய மயமாக்கலுக்குப் பிறகு 34 தனியார் வங்கிகள் இணைக்கப்பட்டுள்ளன. இது வரை, ஒரு இந்திய வங்கி கூட வெளிநாட்டு நிறுவனம் நடத்தும் வங்கியுடன் இணைக்கப்பட வில்லை. லட்சுமி விலாஸ் வங் கியை மட்டும் டிபிஎஸ் வங்கி யுடன் இணைக்க நடவடிக்கை எடுக்கிறார்கள். ரிசர்வ் வங்கியின் முடிவு பிரத மரின் சுயசார்பு பாரதம் செயல் திட்டத்துக்கு எதிரானது.

சமீபத்தில் எஸ் வங்கி பாதிக்கப்பட்ட போது எஸ்பிஐ , எல்ஐசி, ஹெச்டிஎப்சி, ஐசிஐசிஐ, கோடக் மற்றும் சில இந்திய நிறுவனங்களின் பங்களிப்பில் ரூ.12000 கோடி மறு மூலதனம் செய்யப்பட்டு பிரச்சினை சரி செய்யப்பட்டது. தற்போது எஸ் வங்கி முன்னேற்றத்தில் உள்ளது. இதே போன்று லட்சுமி விலாஸ் வங்கிக்குத் தேவையான மூலதனத்தை இந்திய நிறுவனங் களிடம் திரட்டி அந்த வங்கியை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in